4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகர் பகுதியில், மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த் ரவிக்குமார் மகன் பொன்ராஜ் (28), அவரது நண்பர்களான நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த ராஜராம் மகன் மணிகண்டன் (26) மற்றும் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பாலமுருகன் மகன் முத்துகுமார் (22) ஆகிய 3 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பொன்னங்கால்புரத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் வைகுண்டம் பாண்டியன் என்ற வைகுண்டம் (38) என்பவரை கொலை முயற்சி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள்4 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பொன்ராஜ், மணிகண்டன், முத்துகுமார் வைகுண்டம் பாண்டியன் என்ற வைகுண்டம் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com