தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் 19ந்தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தமுறை தஞ்சை தொகுதியில் மட்டும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் அனுமதியின் பேரில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் சிறப்பு சுருக்க திருத்த முறை நடைபெற உள்ளது. அதன்படி கடந்த 20ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து வருகிற 6ந்தேதி வரை 112017 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் எண் 6ல் விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய படிவம் எண்7, பெயர் திருத்தம் மற்றும் வண்ண புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் எண்8 மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவை அதே சட்டமன்ற தொகுதியில் முகவரி மாறுதல் செய்வதற்கான படிவம் எண் 8 ஏ ஆகிய படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 5ந்தேதி ஆகிய 2 நாட்கள் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சான்றாவணங்களுடன் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com