மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது

நாகூர் அருகே மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து 8 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது
Published on

நாகூர்:

நாகூர் அருகே மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து 8 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

சரக்கு வாகனம் கவிழ்ந்தது

நாகை மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள், மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, அதே வாகனத்தில் ஊருக்கு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மீன் வியாபாரத்தை முடித்து கொண்டு சரக்கு வாகனத்தில் நாகைக்கு திரும்பி கொண்டிருந்தனர். நாகூரை அடுத்த ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.

9 பேர் படுகாயம்

இந்த விபத்தில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த டிரைவர் கவியரசன் (வயது 29), அதே பகுதியை சேர்ந்த கவினா (24), செல்லமாள் (70), அஞ்சலி தேவி (31), அஞ்சலை அம்மாள் (40), லட்சுமி (60), செல்வராணி (55) மற்றும் நாகை வெளிப்பாளையம் நம்பியார் நகரை சேர்ந்த கவிதா (26), சித்ரா (37) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்ததும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com