ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மூலக்குளம் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
Published on

மூலக்குளம்

மூலக்குளம் அடுத்த மேரிஉழவர்கரை சிவசக்தி நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அமேந்தர் குமார் (வயது 40). இவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ஒப்பந்த முறையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். நேற்று தொழில் நிமித்தமாக தனது ஸ்கூட்டரில் வில்லியனூருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கோபாலன்கடை அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-------

X

Daily Thanthi
www.dailythanthi.com