மயங்கி விழுந்த பெண் சாவு

பாகூரில் பாட்டு கச்சேரியை கண்டு களித்த பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த பெண் சாவு
Published on

பாகூர்

பாகூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 39). டெய்லர். நேற்று  மாதாகோவில் அருகே பாட்டு கச்சேரி நடந்தது. இதை பார்க்க கீதா சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com