நகை பறிக்க முயன்ற பெண் சிக்கினார்

திருமங்கலம் பஸ் நிலையத்தில் நகை பறிக்க முயன்ற பெண் சிக்கினார்
நகை பறிக்க முயன்ற பெண் சிக்கினார்
Published on

திருமங்கலம்,மார்ச்

தேனி மாவட்டம் தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 47). விவசாய வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் திருமங்கலம் வழியாக விருதுநகர் சென்றனர். வழியில் திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்த கழிவறை அருகே மகாலட்சுமி சென்றபோது அங்கு மறைந்து இருந்த ஒரு பெண் மகாலட்சுமி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.

உடனே மகாலட்சுமி கூச்சலிட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த மகாலட்சுமியின் கணவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து சங்கிலி பறிக்க முயன்ற பெண்ணை பிடித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்தப் பெண் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுந்தரி (வயது 41) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com