விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சித்தையன்கோட்டை சுந்தரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பித்தளைப்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, முன்னால் சென்ற சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று பிரேக் போட்டார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து நாகராஜ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com