தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

முருங்கப்பாக்கம் நடுத்தெருவலி சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

புதுச்சேரி

முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). தொழிலாளி. அவரது மனைவி கிரிஜா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாலை விபத்தில் சிக்கியதில் சிவக்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் திடீரென சிவக்குமார் வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com