சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியம்பட்டியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 25). தொழிலாளி. இவருக்கும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் யூனியன் சமூக நலத்துறை அலுவலர் வெள்ளத்தாய் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சமுத்திரபாண்டியை நேற்று கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com