காருக்குள் அத்துமீறி ஏறிய வாலிபர்.. அதிர்ச்சியடைந்த நடிகை

வாலிபர் ஒருவர் நடிகையின்காருக்குள் அத்துமீறி ஏறியுள்ளார், அதிர்ச்சியடைந்த நடிகை அவரிடம் கீழே இறங்கும்படி கண்டித்து கூச்சல் போட்டார்.
காருக்குள் அத்துமீறி ஏறிய வாலிபர்.. அதிர்ச்சியடைந்த நடிகை
Published on

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழில் அதிபர் ராஷ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷமிஷா என்ற மகள் உள்ளார். ஷில்பா ஷெட்டி தொலைக்காட்சி நடிகை சுமிருதி கன்னாவின் மகள் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, மும்பை ஜூஹு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு தனது மகளுடன் சென்று இருந்தார். விழா முடிந்தபின் வீட்டுக்கு திரும்ப தனது காரில் வந்து ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர் ஷில்பா ஷெட்டியின் காருக்குள் அத்துமீறி ஏறி உட்கார்ந்தார். அவரை பார்த்து ஷில்பா ஷெட்டி அதிர்ச்சியானார்.

அவரிடம் கீழே இறங்கும்படி கண்டித்து கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை காரில் இருந்து வெளியே இழுத்தனர். பின்னர் கார் கதவை அடைத்து ஷில்பா ஷெட்டியை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள காரில் ஏறியதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com