மோட்டார் சைக்கிள் திருட்டு

திருத்தங்கலில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்தது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

சிவகாசி,

திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீராம் சபரி (வயது 29). இவர் வேலாயுதம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வங்கியின் பின்புறம் நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும்போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம்சபரி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருடு போன மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com