நகை பட்டறையில் திருட்டு

திருவாடானை தாலுகாவில் நகை பட்டறையில் திருட்டு நடைபெற்றது.
நகை பட்டறையில் திருட்டு
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் செல்வம் (வயது 52). இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை திறக்க சென்றபோது கடையின் மேற்கூரையைப் பிரித்து கடைக்குள் இறங்கி பட்டறையில் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தோடு, வெள்ளி கொலுசு போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் எஸ்.பி. பட்டினம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com