2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

புதுவையில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றனர்.
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Published on

புதுச்சேரி

புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வேந்தன் (வயது39). இவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த யுவராஜ் (24). இ.சி.ஆர். சாலையில் அவர் பணியுரியும் தனியார் நிறுவனத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் திரும்பி வந்தபார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com