2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

புதுவையில் இருவேறு இடங்களில் மோட்டர் சைக்கிள் திருடு போயின. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Published on

புதுச்சேரி

அரியாங்குப்பம் வீராம்பட்டினம் ரோடு காக்காயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). இவர் புதுவை காந்திவீதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டலில் முன் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் குறிஞ்சிப்பாடி சக்திநகரை சேர்ந்தவர் அருண்குமார் (27). இவர் புதுவை 100 சாலையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை முத்தியால்பேட்டை பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com