மேக்கப் பொருட்கள் திருட்டு.. பிரபல நடிகர் போலீசில் புகார்

பிரபல நடிகரின் மேக்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேக்கப் பொருட்கள் திருட்டு.. பிரபல நடிகர் போலீசில் புகார்
Published on

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு. இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜை தோற்கடித்து விஷ்ணு மஞ்சு தலைவராக வெற்றி பெற்றார். இந்த நிலையில் விஷ்ணு மஞ்சு தனது வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் தனது வீட்டில் மேக்கப் பொருட்கள் வைத்திருந்த பெட்டியை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும், அந்த மேக்கப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் சங்கத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதனை மறுத்த போலீசார், விஷ்ணு மஞ்சுவின் வீட்டில் இருந்துதான் மேக்கப் பொருட்கள் காணாமல் போய் உள்ளன என்றும், தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் திருட்டு நடந்ததாக புகார் எதுவும் வரவில்லை என்றும் கூறினர். மேக்கப் பொருட்கள் திருட்டு போனதிலிருந்து விஷ்ணு மஞ்சுவின் சிகையலங்கார நிபுணரை காணவில்லை. எனவே அவர் திருடி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com