மருத்துவமனை பெண் ஊழியரின் ஸ்கூட்டர் திருட்டு

புதுவையில் மருத்துவமனை பெண் ஊழியரின் ஸ்கூட்டர் திருடப்பட்டது.
மருத்துவமனை பெண் ஊழியரின் ஸ்கூட்டர் திருட்டு
Published on

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சுபா (வயது 39), தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்தார்.

மறுநாள் காலை பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ மர்மநபர் ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து தவளக்குப்பம் போலீசில் சுபா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடு போன ஸ்கூட்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com