சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது- தமன்னா

சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என்று தமன்னா கூறியுள்ளார்.
சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது- தமன்னா
Published on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், தமன்னா. சிம்ரனுக்கு அடுத்து `இடையழகி' என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் இவர்தான். தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் இவரும் ஒருவர். இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ''சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ''கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ...'' என்று ஆதங்கப் பட்டார்.

2019-ம் ஆண்டில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்துக்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com