வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

காரைக்கால்

கோட்டுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கதவு உடைப்பு

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி குப்புசெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. அவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை கணவர் முருகேசனிடம் கொடுத்து விட்டு அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். முருகேசனும் கடந்த 4 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை.

நேற்று  காலை சீதாலட்சுமி வீட்டுக்கு வந்தார். பின்னர் கணவரிடம் இருந்து சாவியை வாங்கி வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

6 பவுன் நகை, பணம் திருட்டு

வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com