திருக்குவளை அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்தது; 10 பேர் காயம்

திருக்குவளை அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர்.
திருக்குவளை அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்தது; 10 பேர் காயம்
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ஆய்மழை நாரணமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது60). சம்பவத்தன்று இவர் தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் திருக்குவளையை அடுத்த மேலவாழக்கரையில் உள்ள உறவினரின் காதணி விழாவிற்கு வேனில் சென்றுள்ளனர். விழா முடிந்து மீண்டும் ஆய்மழைக்கு வேனில் புறப்பட்டுள்ளனர். வேன் கீழவாழக்கரை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள சந்திரநதி ஆற்றில் கவிழ்ந்தது.

10 பேர் காயம்

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதை தொடர்ந்து காயம் அடைந்திருந்த தங்கவேல், அவரது மனைவி நாகவள்ளி, பேத்தி பிரின்யா உள்ளிட்ட 10 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com