மனை பிரிவு அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருவேற்காடு நகரமைப்பு அலுவலர் கைது

திருவேற்காடு நகரமைப்பு அலுவலர் சாந்தி என்பவர் மனை பிரிவு அனுமதி வழங்க, ஜெயலட்சுமி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மனை பிரிவு அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருவேற்காடு நகரமைப்பு அலுவலர் கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாரத்தில், சிறப்புநிலை நகராட்சியாக திருவேற்காடு நகராட்சி உள்ளது.

திருவேற்காடு நகரமைப்பு அலுவலர் சாந்தி என்பவர் மனை பிரிவு அனுமதி வழங்க, ஜெயலட்சுமி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயலட்சுமி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் அடிப்படையில் இன்று திருவேற்காடு நகராட்சி அலுவலர் சாந்தி என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com