பொன் ஏர் விடும் திருவிழா

கமுதி அருகே கீழராமநதியில் பொன் ஏர் விடும் திருவிழா நடந்தது.
பொன் ஏர் விடும் திருவிழா
Published on

கமுதி,

கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில், சித்திரை மாதம் பிறந்தவுடன், நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து கோடை உழவு பணி தொடங்குவதற்கு பொன் ஏர் விடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை நடைபெற்ற இவ்விழாவில், நூற்றுக் கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். வயல்வெளி பகுதியில், 8 ஜோடி மாடுகள் கொண்டு ஏர் பூட்டி கலப்பையுடனும், மேலும் டிராக்டர் மூலமாகவும் உழுது, கோடை உழவு பணியை தொடங்கினர். இப்பகுதியில் நெல், மிளகாய், பருத்தி, சோளம் போன்ற பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த பொன் ஏர் விடும் விழாவில், இந்துக்கள், முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com