நாகூர் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 23-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி, குத்து விளக்கை அம்பாளாக பாவித்து வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com