விருதாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

விருதாளா சங்கம் சாபில் முப்பரும் விழா முதலியாபட்ட தனியா பள்ளியில் நடைபற்றது.
விருதாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
Published on

புதுச்சேரி

புதுவை அரசு தமிழ்மாமணி கலைமாமணி தெலுங்கு மலையாள ரத்னா விருதாளர் சங்கம் சார்பில் புதுச்சேரி விடுதலை நாள், தமிழ் செம்மொழி நாள், கவிஞர் புதுவை சிவம் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா முதலியார்பேட்டை தனியார் பள்ளியில் நடந்தது.

விழாவுக்கு வேல்முருகன் தலைமை தாங்கினார். துரை மாலிறையன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சம்பத் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பூங்கொடி பராங்குசம், உசேன் மற்றும் அரியபுத்திரி, ராஜன், குலசேகரன், அசோக சுப்ரமணியன், ஜோதி செந்தில்கண்ணன், நெல்லைராஜன், விஜயலட்சுமி, ராஜேந்திரன், தட்சணாமூர்த்தி, ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக சரோஜாபாபு வரவேற்றார். தமிழ்வாணன் தொகுத்து வழங்கினார். இதில் மாணவ-மாணவிகளின் பேச்சு, கவிதை, இசைப்போட்டிகள் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com