சாக்ஷி அகர்வாலின் திரில்லர் கதை

சாக்ஷி அகர்வாலின் திரில்லர் கதை
Published on

அபி சரவணன் நாயகனாகவும், சாக்ஷி அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் படம் `சாரா'. இதில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரில்லர் படமாக உருவாகிறது. ரஜித் கண்ணா டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் மற்றும் குறும்படங்களை இயக்கி `வெள்ளை' என்ற படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார்.

சாரா படம் பற்றி அவர் கூறும்போது, "ஒரு தாயை நேசிக்கும் மகனின் கதையில் இன்றைய நவீன உலக நட்பையும், காதலையும் பேசும் அழுத்தமான களத்தில் பரபரப்பான திரைக்கதையுடன் ஒரு முழுமையான திரில்லர் அனுபவம் தரும் திரைப்படமாக உருவாகவுள்ளது'' என்றார். இசை: கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: ஜே.லட்சுமண். தமிழில் பல படங்களை வினியோகம் செய்த ஷ்வா டிரீம் வேல்டு பட நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com