மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on

திண்டுக்கல்,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல், இந்த மாதம் 22-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம், தொகுதி இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் வாக்குச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்திலும் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com