வீட்டிற்கு கொசுவலை கதவை தேர்ந்தெடுப்பது எப்படி?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், ஒவ்வொரு முறை குடியிருக்கும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலின் அளவிற்கேற்ப கொசு வலையின் அளவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால், கதவு வடிவில் கொசு வலையை அமைப்பதைவிட, தற்காலிகமான கொசுவலை ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.
வீட்டிற்கு கொசுவலை கதவை தேர்ந்தெடுப்பது எப்படி?
Published on

ழைக்காலத்தில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் பகல் நேரங்களிலும் கூட கொசுத் தொல்லை ஏற்படும். கொசுக்கள் பல்வேறு நோய்களை உண்டாக்கும். இவற்றை தவிர்க்க பலரும் படுக்கையைச் சுற்றி கொசுவலை அமைப்பார்கள். ஆனால், வீட்டின் மற்ற இடங்களில் இருக்கும்போது ஏற்படும் கொசுத் தொல்லையில் இருந்து நம்மால் தப்பிக்க இயலாது. இவற்றுக்கு சிறந்த தீர்வு வீட்டின் கதவு மற்றும் ஜன்னலுக்கு கொசுவலை கொண்ட கதவு அமைப்பது. இவ்வாறு வீட்டில் கொசுவலை கதவை தேர்ந்தெடுத்து அமைக்கும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை,

சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் பயன்படுத்தும் கொசுவலை கதவுகளில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது என்பதால், கொசுவலை கதவை வீட்டின் நுழைவாயிலிலேயே அமைக்கலாம். ஸ்கிரீன் போன்று இல்லாமல், மடக்கக் கூடிய, ஸ்லைடிங் டோர் அல்லது திறக்கும் வடிவிலான, கிட்டாரில் உள்ளது போன்ற கம்பி அமைப்பு கொண்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் காந்தவியல் லாக் கொண்டு கொசுவலை கதவை அமைக்கலாம். இவை, கொசுக்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதுடன், வீட்டிற்குள் தூசி வருவதைத் தடுத்து, வெளிச்சம் மற்றும் காற்று புகுவதை அனுமதிக்கின்றன. இவை விலை மலிவானது மற்றும் பயன்படுத்தும் விதமும் எளிதானது.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், ஒவ்வொரு முறை குடியிருக்கும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலின் அளவிற்கேற்ப கொசு வலையின் அளவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால், கதவு வடிவில் கொசு வலையை அமைப்பதைவிட, தற்காலிகமான கொசுவலை ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம். மேலும், கதவுகளின் ஓரங்களில் ஆணி அடித்து அல்லது டேப் ஒட்டி கொசு வலைகளை அமைப்பதை விட, வெல்க்ரோ அல்லது காந்தவியல் லாக் பயன்படுத்தி கொசுவலைகளை அமைக்கலாம். இவற்றை அகற்றுவதும், பராமரிப்பதும், மறுசீரமைப்பு செய்வதும் எளிதானது.

நகரங்களில் வசிப்பவர்கள் பிளாஸ்டிக், பைபர், மைக்ரோ கார்பன், பாலிஸ்டர் மெல்லிய கம்பிகளால் ஆன கொசு வலைகளையும், கிராமப்புறங்கள் மற்றும் செடிகள் அடர்ந்த பகுதியில் வசிப்பவர்கள் பைபர், இரட்டை மெல்லிய கம்பி வலை, அலுமினிய வலை, பாலிஸ்டர், அடர்த்தியான துணி அல்லது கம்பிகளால் செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தலாம். மேலும், வீட்டின் கதவுக்கு அடர் நிறத்திலும், ஜன்னலுக்கு வெளிர் நிறத்திலும் வலையைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், அடர் நிறத்தை விட வெளிர் நிறத்திற்கு அதிக வெளிச்சமும், காற்றோட்டமும் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com