ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய த.மு.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல்
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை),

த.மு.மு.க.வினர் இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை முத்துக்கடையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹசன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்கள், தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜாமுகம்மது, ராணிப்பேட்டை நகர தலைவர் அஸ்மத், நகர செயலாளர் கரிமுல்லா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் சுலைமான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com