

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில், 16 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 628 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுவில் தனது பெயரை சி.ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு போட்டியாக விஜய் என்ற பெயரில் மேலும் 2 பேரும், ஜோசப் என்ற பெயரில் 2 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். அதாவது, ஜி.விஜய், கே.விஜய், எம்.ஜோசப், எஸ்.ஜோசப் என 4 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.