பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த ஆதவ் அர்ஜுனா

த.வெ.க. ஆட்சியில் அனைத்து சமூக மக்களுக்கும் சமமான நல்லாட்சியை வழங்குவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

வில்லிவாக்கம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று சிட்கோ நகரில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்ற அவர், அங்கிருந்த இஸ்லாமியர்களை சந்தித்து தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், அங்குள்ள இஸ்லாமிய சமூக மக்களுடன் உரையாடிய ஆதவ் அர்ஜுனா, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். த.வெ.க. ஆட்சி அமைந்ததும் அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த ஆதவ் அர்ஜுனா, த.வெ.க. ஆட்சியில் அனைத்து சமூக மக்களுக்கும் சமமான நல்லாட்சியை வழங்குவோம் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com