அதிமுக வேட்பாளருக்கு ராட்சத ஆரஞ்சு மாலை... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளருக்கு ராட்சத ஆரஞ்சு மாலை... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Published on: 

அம்பை,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இம்முறையும் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் சேரன்மகாதேவியில் பேருந்து நிலையம் அருகே கிரேன் மூலம் ஆரஞ்சு பழங்களால் கட்டப்பட்டிருந்த சுமார் 600 கிலோ எடையுள்ள பிரமாண்ட மாலையை தொண்டர்கள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com