சட்டமன்ற தேர்தல்; அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?

அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களின் பட்டியலில் கரூர் தான் முதல் இடம் பிடித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்; அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டசபை தேர்தலில் 84.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தும் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதிக அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களின் பட்டியலில் கரூர் தான் முதல் இடம் பிடித்துள்ளது.

அதிக வாக்குகள் பதிவான முதல் 5 மாவட்டங்கள்:-

கரூர் - 91.86%

சேலம் - 90.13%

தருமபுரி - 89.78%

ஈரோடு - 89.77%

நாமக்கல் - 89.46%

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com