பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் பாஜக 27 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், தமிழக சட்டசபை தேர்​தல் களம் சூடு​பிடித்​துள்​ளது.

தொகு​திப் பங்​கீடு, வேட்​பாளர் தேர்​வில் அரசி​யல் கட்​சிகள் மும்​முரம் காட்டி வரு​கின்​றன. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. முதல்-அமைச்சர், மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் பாஜக 27 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது இவற்றை வெளியிட தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் நாளை காலை சென்னை வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com