‘பீகார் மாடலை தமிழ்நாட்டில் செயல்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது’ - ராகுல் காந்தி

அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நுழைய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
‘பீகார் மாடலை தமிழ்நாட்டில் செயல்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது’ - ராகுல் காந்தி
Published on

தூத்துக்குடி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பீகாரில், நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி அப்பதவியில் அமர்த்தப்பட்டார். நிதிஷ் குமார் சமரசம் செய்துகொண்டார், அதனால், அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக மாநிலங்களவைக்குச் சென்றார். நிதிஷ் குமாரின் கடந்தகாலச் செயல்களை வைத்து பா.ஜ.க. அவரை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டது.

மேலும் அவர்கள் அதே பீகார் மாடலை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வில் தமிழ் மக்களைப் பாதுகாத்த சிறந்த தலைவர்கள் இருந்தனர். ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்த அந்த பழைய அ.தி.மு.க. இப்போது இல்லை.

மக்களுக்குச் சேவை செய்த பழைய அ.தி.மு.க. முடிந்துவிட்டது. அ.தி.மு.க. தலைவர்கள் தங்கள் ஊழலால் சமரசம் செய்துகொண்டுள்ளனர். அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நுழைய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க.வில் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் கட்சியை கட்டுப்படுத்தவில்லை. அ.தி.மு.க.வை கட்டுப்படுத்துபவர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியால் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com