இரு தொகுதிகளில் போட்டியிடுவது தோல்வியின் ஆரம்பம் - கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
இரு தொகுதிகளில் போட்டியிடுவது தோல்வியின் ஆரம்பம் - கமல்ஹாசன்
Published on

திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே4-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதை மறைமுகமாக விமர்சித்து நானும் தேர்தலுக்கு வரும் போது இரண்டு தொகுதியில் நிற்கலாம் என்றார்கள். அது தோல்வியின் ஆரம்பம் என்று நான் சொல்லிவிட்டேன். ஒரு தொகுதியில் மட்டுமே நிற்க வேண்டும் என்ற அறிவு எனக்கு அப்போது இருந்தது. அந்த அறிவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அறிவுரையாகும்.

இரண்டு தொகுதியில் போட்டியிடும் போது ஒரு தொகுதி வாக்காளர்களுக்கு துரோகம் செய்யும் நிலைமை ஏற்படும். இதற்கு முன்னால் வட இந்தியாவில் ஏதோ ஒரு பெரிய தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் என்று சொல்கிறார்கள், அவருக்கும் சேர்த்து தான் இந்த அறிவுரை என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com