கோவை மக்களை திமுக வஞ்சித்து வருகிறது - அண்ணாமலை

திமுக அரசு கோவை மாநகரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது என அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மக்களை திமுக வஞ்சித்து வருகிறது - அண்ணாமலை
Published on

கோவை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் அண்ணன் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சியை முடக்கி, கடந்த 5 ஆண்டுகளாக கோவை மக்களை திமுக வஞ்சித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தொடங்கி தொழில்துறை வளர்ச்சி வரை ஒவ்வொரு முறையும் திமுக அரசு கோவை மாநகரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது. கோவை மாநகரத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, இப்பகுதியில் தொழிற்துறையை மீட்டெடுத்து நமது கோவையை வளமான கோவையாக உருவாக்கிட வேண்டும் என்ற உறுதியேற்று வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க கோவை மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

அடுத்த 2 நாட்களும், நமக்கு தெரிந்த உள்ளூர் வாக்காளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து அனைவரின் ஆதரவையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது செயலாற்ற வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கோவை மக்கள் வழங்குவதை நாமும் இணைந்து உறுதி செய்திட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! கோவை மாநகரம் வளரட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com