"எடப்பாடி பழனிசாமி ஏன் இரட்டை விரலை காட்டுறார் தெரியுமா?" - உதயநிதி ஸ்டாலின

பழனிசாமியை வருகிற சட்டபேரவை தேர்தலில் அனைவரும் இணைந்து தோல்வியை கொடுத்து வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
"எடப்பாடி பழனிசாமி ஏன் இரட்டை விரலை காட்டுறார் தெரியுமா?" - உதயநிதி ஸ்டாலின
Published on

புதுக்கோட்டை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி இப்போது எங்கு சென்றாலும் இரட்டை விரலை காட்டி வருகிறார். நீங்கள் எல்லாம் அதிமுகவின் சின்னத்தை காட்டி வாக்கு கேட்டு வருகிறார் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படி கிடையாது, ஏற்கனவே பத்து தோல்விகளை அடைந்து விட்டேன். இந்த முறையும் வெற்றி பெறாவிட்டால் அது 11-வது தோல்வி என காண்பித்து வருகிறார்.

பழனிசாமியை வருகிற சட்டபேரவை தேர்தலில் அனைவரும் இணைந்து தோல்வியை கொடுத்து வீட்டிற்கு அனுப்பவேண்டும். அதை தமிழ்நாட்டு மக்கள் நடத்தி காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com