ஊட்டியில் குஷ்பு வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

உதகையில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஊட்டியில் குஷ்பு வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் குஷ்பு பயணம் மேற்கொண்டார்.

உதகையில் குஷ்பு பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின்னர், கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு குஷ்பு சென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com