‘என் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்’ - குஷ்பு பேட்டி

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தி.மு.க.விற்கும் இடையில்தான் போட்டி என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
‘என் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்’ - குஷ்பு பேட்டி
Published on

மதுரை,

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது சுந்தர்.சியின் மனைவி குஷ்புவும் உடன் இருந்தார்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

“இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தி.மு.க.விற்கும் இடையில்தான் போட்டி. த.வெ.க. தலைவர் விஜய், இப்போதுதான் களத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை கூறியிருக்கிறேன். தேர்தலில் அவரது தாக்கம் குறித்து மே 4-ந்தேதிக்கு பிறகு பேசுவதுதான் சரியாக இருக்கும்.

விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு நான் ஒன்றும் அவரது செய்தி தொடர்பாளர் கிடையாது. அவர் என் தம்பிதான். ஏற்கனவே எனது கணவர் சுந்தர்.சியிடம் விஜய் பற்றி கேட்டபோது, விஜய் பற்றி விமர்சிக்கப் போவதில்லை என்று கூறினார். நானும் என் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்.”

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com