

சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் த.வெ.க. சார்பில் மனு தாக்கல் செய்த அருண்குமாரின் மனு தள்ளுபடியான நிலையில், அந்த தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த கே.பிரேம்குமாருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. த.வெ.க. தலைவர் விஜய் தனது ஆதரவை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு தெரிவித்தார்.
அவருக்கு த.வெ.க.வினர் 48 மணி நேரம் தீவிர பிரசாரம் செய்தனர். அவரது சுயேச்சை சின்னமான டி.வி. பெட்டிக்கு நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 50,823 வாக்குகள் பெற்று அவர் 2-வது இடம்பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.