

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் நேரடி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் புகார்களைப் பரிசீலிக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இரண்டு எளிதான வழிமுறைகளை அறிவித்துள்ளது.
மனுக்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களைத் தபாலில் எழுதி, "மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவை உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடிய பொதுமக்கள், அலுவலக வளாகத்தில் இதற்கென பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள "மனுக்கள் பெட்டியில்" தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாகச் செலுத்தலாம்.
மறு உத்தரவு வரும் வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நேரில் நடைபெறாது என்பதால், பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தித் தங்கள் மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.