

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், வரும் 5-ந்தேதி புதுச்சேரியில் 22 இடங்களில் ‘ரோடு ஷோ’ மற்றும் பிரசாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அக்கட்சி சார்பில் புதுச்சேரி காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால் 22 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்த காவல்துறையினர், 8 இடங்களை மட்டும் தேர்வு செய்ய த.வெ.க.வினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி, விஜய்யின் பிரசாரத்திற்காக மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணியில் புதுச்சேரி த.வெ.க.வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.