

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அன்புமணி வெளியிட்டார்.
இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகர் 10, திலக் தெருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (01.04.2026) 11.00 மணிக்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிடுகிறார்.
பா.ம.க. தேர்தல் அறிக்கை செய்தி சேகரிப்பதற்காக தங்களின் ஊடகத்திலிருந்து செய்தியாளரையும், ஒளிப்பதிவாளர்/ புகைப்பட கலைஞரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.