

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை 9 சட்டசமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம்.
16.04.2026: :
காலை 7.30 மணி : ஆத்தூர்
காலை 10.00 மணி : ஊத்தங்கரை
நண்பகல் 11.30 மணி : கிருஷ்ணகிரி
பிற்பகல் 12.30 மணி : பென்னாகரம்
மாலை 4.00 மணி : ஈரோடு கிழக்கு
மாலை 4.30 மணி : ஈரோடு மேற்கு
மாலை 6.30 மணி : சிங்காநல்லூர்
இரவு 7.30 மணி : கவுண்டம்பாளையம்
இரவு 8.00 மணி : கோவை தெற்கு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.