எடப்பாடி பழனிச்சாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது: ஓ பன்னீர் செல்வம் பேச்சு

கட்சியை படுகுழியில் தள்ளிய எடப்பாடி பழனிச்சாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்று திமுகவின் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது: ஓ பன்னீர் செல்வம் பேச்சு
Published on

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட லாடியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வநத முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நன்றி மறந்த ஆள் யாரென்றால், எடப் பாடி பழனிசாமிதான். ஊர்ந்து, ஊர்ந்து காலை தொட்டு பதவி வாங்கியவர். அவரது 4½ ஆண்டு ஆட்சியை காப்பாற்றியது நான்தான். ஆனால் எந்த இடத்திலும் நான் இருக்கக்கூடாது என வேலைசெய்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் குண்டர்களை வைத்து 23 தீர்மானங்களை கொண்டு வந்தார். அதிமுகவை படுகுழியில் தள்ளியிருக்கிற பழனிசாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com