

சென்னை,
தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட உள்ளன. வாக்குகள் பதிவான இ.வி.எம். எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட கணினி நிரலாளர்கள் மற்றும் உதவி கணினி நிரலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வே.ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.மேனுவல்ராஜ், புதுச்சேரி முதன்மைப் பயிற்சியாளர் ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.