தவெக தொடர்ந்து முன்னிலை: விஜய் வீடு, பனையூர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தவெக தொடர்ந்து முன்னிலை: விஜய் வீடு, பனையூர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 102 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், நீலாங்கரையில் உள்ள கட்சியின் தலைவர் விஜய் வீடு, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com