அ.தி.மு.க.வின் கோட்டையான அவினாசி தொகுதியில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டி

கொங்கு மண்டலத்தில் முக்கிய தொகுதியான அவினாசி தனி தொகுதியாகும். இந்த தொகுதி அ.தி.மு.க. கோட்டையாக இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 27 இடங்களில் அவினாசி தொகுதியும் அடங்கும். கொங்கு மண்டலத்தில் முக்கிய தொகுதியான அவினாசி தனி தொகுதியாகும். இந்த தொகுதி அ.தி.மு.க. கோட்டையாக இருக்கிறது.

1984 முதல் 2021 வரையிலான 9 தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதியை அ.தி.மு.க. எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியை பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் போட்டியிட உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, அவினாசி தொகுதியில் இப்போதே மத்திய மந்திரி எல்.முருகன் பிரசாரத்தை தொடங்கி விட்டார். அங்குள்ள காசி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து அவர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். அவருடன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com