விஜய் ஆட்சி பீடத்தில் அமரமுடியாது - திருமாவளவன்

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதற்காக விஜய் போராடி வருகின்றார்.
விஜய் ஆட்சி பீடத்தில் அமரமுடியாது - திருமாவளவன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் திமுக வேட்பாளரை ஆதரித்து விசிகவின் நிறுவனர் தொல் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கி விட்டு யாரை அந்த இடத்தில் அமரவைக்க விஜய் முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. கட்டாயமாக விஜய் ஆட்சி பீடத்தில் அமரப்போவதில்லை. அது அவருக்கே நன்றாக தெரியும்.அதனால் தான் தோல்வி பயத்தினால் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

திமுகவை அப்புறப்படுத்தி விட்டு தவெகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க முடியாது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதற்காக விஜய் போராடி வருகின்றார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com