தேர்தல் தேதி அறிவித்த உடன் அமலாகும் விதிகள் என்னென்ன?

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த உடன் அமலாகும் விதிகள் என்னென்ன?
Published on

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். இதில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள், விதிகள் இடம் பெறும் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

  • தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

  • பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

  • அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

  • கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்

  • ரொக்கமாக பணம் கையில் எடுத்து செல்ல கட்டுப்பாடு. கடந்த தேர்தல் வரை 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல தடை இருந்தது

    இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கபட வாய்ப்புள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com