

கரூர்,
கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, கரூரில் நிற்காமல் கோவையில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். -
அவர் பேசுகையில், ‘கரூர் இருந்து அவரங்குறிச்சி போகும் போது இந்த கருத்து வரவில்லை. ஆனால் இப்போது தோல்வி பயத்தாலும் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாமலும் இந்த மாதரியான கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் தொண்டனின் கடமை. இது வேண்டும் என்று நான் ஒரு இடத்திலும் கேட்கமாட்டேன். என்னை பொறுத்தவரை கோவை வேறு, கரூர் வேறு இல்ல. அவை எனது இரு கண்களை போல. கரூரில் இருந்து கோவைக்கான அரசு பணிகளை முன்னெடுத்து செய்தியிருக்கிறோம் இனி கோவையில் இருந்து கரூரை பார்த்துக்கொள்வோம்’ என்றார்.